பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தற்போது, இறுதி கட்டத்தை நோக்கி மிகவும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. இதனால் நிகழ்ச்சியை சுவாரஸ்யம் ஆக்கும் வகையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்கள்.

அந்த வகையில் இன்று ஹவுஸ் மேட்ஸ் ஏழு பேருக்கும் வித்தியாசமான டாஸ்க் கொடுக்கப்படுவது, தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ மூலம் தெரிகிறது.

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், ஒரு காலால் பேலன்ஸ் செய்து கொண்டு, மற்றொரு முனையில் கற்களை போட்டியாளர்கள் அடுக்க வேண்டும். இதற்காக போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் பல்வேறு கலர்களில்... கற்கள் மற்றும் எடை கல் போன்ற கட்டை உள்ளிட்ட பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் சேரன் தன்னுடைய கால்களை கீழே வைத்ததால் போட்டியில் இருந்து வெளியேறுகிறார். அவரை தொடர்ந்து சாண்டி வெளியேறிய காட்சியும் காட்டப்படுகிறது. இறுதியாக கவின், லாஸ்லியா, மற்றும் முகேன் ஆகியோர் மட்டுமே இந்த போட்டியில் உள்ளனர்.

குறிப்பாக கவின் - லாஸ்லியா இருவரும் இந்த போட்டியில் போடுவது, எதிர்பார்ப்பை இருதரப்பு ரசிகர்கள் மத்தியிலும் அதிகரிக்க செய்துள்ளது. கவின் லாஸ்லியாவிற்காக விட்டு கொடுத்து, அவரை வெற்றி பெற வைப்பாரா..! அல்லது இதில் அவர் வெற்றிபெறுவாரா... முகேன் வெற்றிபெறுவாரா பெறுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்க்கும் விதத்தில் மிகவும் விறுவிறுப்புடன் வெளியாகியுள்ளது தற்போதைய ப்ரோமோ...

அந்த காட்சி இதோ....