பிக்பாஸ் முதல் சீசன் பெற்ற, ஆதரவை இரண்டாவது சீசன் இன்னும் பெறவில்லை என்பது தான் பலரது கருத்து. நாட்கள் செல்ல செல்ல, நிகழ்ச்சி சூடு பிடிக்கும் என எதிர்ப்பார்த்த பலருக்கும் சற்று ஏமாற்றம் தான் மிஞ்சியுள்ளது. நாளுக்கு நாள் சண்டை சச்சரவுகள் தான் கூடிக்கொண்டே போகிறதே... தவிர யாரும் எதார்த்தமாக நடந்து கொள்ளவில்லை என ரசிகர்கள் கூறுகிறார்கள்.

மேலும் தற்போது கமல் மீதும் சிலர் ஒரு சில குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர். அதற்க்கு முக்கிய காரணம் கமல் காட்டும் பாரபச்சம் தான். நித்தியாவின் வெங்காய விஷயத்தை பெரிதாக பேசினார். பாலாஜி மற்றும் மும்தாஜ் எது செய்தாலும் அவர்களை கேள்வி கேட்கிறார். ஆனால் மஹத், ஐஸ்வர்யா, மற்றும் யாஷிகா எது செய்தாலும் அதனை பெரிதாக கண்டிப்பதும் இல்லை கண்டு கொள்வதும் இல்லை என்பது பலரது கருத்து.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில்... மஹத், யாஷிகா, ஐஸ்வர்யா ஆகிய மூன்று போரையும் கண்டிக்க வேண்டும் என ரசிகர்கள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. இதற்க்கு கமலும் மிகவும் கோபமாக, கண்டித்து விட்டேன், கோவப்பட்டேன் அவர்கள் கேட்டார்களா இனி என்ன செய்ய சொல்கிறீர்கள் என்னை என ரசிகர்களை பார்த்து கேட்கிறார்.

ரசிகர்கள் தரப்பில் இருந்து ஆணித்தனமாக ஐஸ்வர்யா, மஹத், மற்றும் யாஷிகா ஆகிய மூன்று போரையும் கண்டிக்க வேண்டும் என  கூறப்படுகிறது. உடனே கமல் மெனு கொடுத்துடீங்கள இனி சமையல் தான் தாளிச்சிடலாம் என கூறுகிறார். இவர் இப்படி கூறியதும் கை தட்டல்களும் பறக்கிறது. இன்று என்ன நடக்க போகிறது கமல் எப்படி தாளித்து சமையல் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.