16 போட்டியாளர்களுடன் ஆரம்பமான, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வாரம் ஒரு நபர் கண்டிப்பாக வெளியேற்றப்படுவார் என்பது நாம் அறிந்தது தான். அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ மூலம் இன்று வெளியேறப்போவது யார் என்பது தெரியவந்துள்ளது.

 

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமான நாள் முதல் எலிமினேஷன் லிஸ்டில் தொடர்ந்து இடம் பிடித்து வந்தவர் காமெடி நடிகர் பாலாஜியின் மனைவி நித்யா. 

ஒரே ஒரு வாரம் மட்டும் இவர், பிக் பாஸ் வீட்டின் தலைவியாக நேரடியாக தேர்வு செய்யப்பட்டதால், இவரை யாரும் நாமினேட் செய்யவில்லை. 

இந்நிலையில் இந்தவாரத்தின் கடைசி நாளான இன்று கண்டிப்பாக ஒருவர் வெளியேற்றப்படுவார். நேற்றைய தினம் நடிகர் பொன்னம்பலம் மட்டும் இந்த வாரம் எலிமினேஷனில் இருந்து விடுவிக்கப்படுவதாக கமல் அறிவித்தார். தற்போது இந்த லிஸ்டில் இருப்பவர்கள் (பாலாஜி, யாஷிகா மற்றும் நித்யா).

இன்று வெளியாகியுள்ள ஒரு ப்ரோமோவில் தாடி பாலாஜியின் மகள் யாஷிகா உள்ளே உள்ள தந்தையிடம் பேசுவது போல் உள்ளது.  அதே போல் மற்ற போட்டிளார்கள் அழுவது காட்டப்படும் போது நித்யா மட்டும் காட்டப்படவில்லை இதில் இருந்து இன்றைய தினம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது தாடி பாலாஜியின் மனைவியாக இருக்கலாம் என கூறப்படுகிறது.