ஆஸ்கார் உள்ளிட்ட சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அழைத்து சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கும் அளவிற்கு இன்றைய இந்தி நடிகைகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக உள்ளனர்.

அதே போல் தாங்கள் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் கோடி கணக்கில் சம்பளம் வாங்குகின்றனர். மேலும் விளம்பரம், விளம்பர் அம்பசிடர் என இவர்களுக்கு வருமானம் குவிகிறது. 

இப்படி சம்பாதிக்கும் பணத்தை, ரியல் எஸ்டேட், வணிக வளாகங்கள், பங்களா, வீடுகள் என்று முதலீடு செய்து வருமானத்தை அதிக படுத்திக்கொள்கின்றனர். 

இந்நிலையில் தற்போது பாலிவுட் திரையுலகில் அதிகம் சொத்து சேர்த்த டாப் 10 நடிகைகள் பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் நடிகை தீபிகா படுகோன் முதல் இடத்தில் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு 317 கோடி. இவர் ஒரு திரைப்படத்திற்கு வாங்கும் சம்பளம் தற்போது 15 கோடி.

இரண்டாவது இடத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளார். இவரின் சொத்து மதிப்பு 285 கோடி. ஒரு படத்திற்கு சம்பளமாக இவர் தற்போது வாங்கும் தொகை 12 கோடி. மேலும் விளம்பர படங்களுக்கு 5 கோடி சம்பளமாக பெறுகிறார்.

இவரை தொடர்ந்து மூன்றாவது இடத்தில் உள்ளவர் நடிகை ஐஸ்வர்யா ராய் இவரின் சொத்து மதிப்பு 246 கோடி. தற்போது ஐஸ்வர்யா ராய் ஒரு படத்தில் நடிக்க வாங்கும் தொகை 10 கோடி.

இவரை போலவே திருமணத்திற்கு பிறகும் நடித்து வரும் நடிகை மாதுரி தீட்சித்தின் சொத்து மதிப்பும்  246 கோடி தான். இவர் தற்போது ஒரு படத்தில் நடிக்க 3 கோடி முதல் 5 கோடி வரை சம்பளமாக பெறுகிறார்.

ஐந்தாவது இடத்தில் இருப்பவர் நடிகை ப்ரீத்தி ஜிந்தா. இவரின் சொத்து மதிப்பு 211 கோடி. இவர் திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டாலும். வியாபார ரீதியாக பெரிய தொகையை மாதம் தோறும் ஈட்டி வருகிறார்.

ஆறாவது இடத்தில் உள்ளவர், நடிகை வித்யா பாலன். இவரின் சொத்து மதிப்பு 190 கோடி. திருமணத்தை தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் இவர், ஒரு படத்திற்கு 7 கோடி சம்பளமாக பெறுகிறார்.

ஏழாவது இடத்தில் உள்ளவர் நம்ப விராட் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மா. இவரின் சொத்து மதிப்பு 176 கோடி. இவர் தற்போது நடித்து வரும் படங்களுக்கு சம்பளமாக 7 கோடியில் இருந்து, 9 கோடி சம்பளமாக பெறுகிறார்.

எட்டாவது இடத்தில் உள்ளவர் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு, திரையுலகில் கவனம் செலுத்தி வரும் நடிகை சோனம் கபூர். இவரின் சொத்து மதிப்பு 105 கோடி. இவர் தற்போது ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 6 கோடி.

ஒன்பதாவது இடத்தில் உள்ளவர், நடிகை சோனாக்சி சின்ஹா. இவரின் சொத்து மதிப்பும் 105 கோடி தான் இவர் ஒரு படத்திற்காக பெரும் சம்பளம் 6 கோடியாக உள்ளது.

இவரை தொடர்ந்து 10 ஆவது இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளவர் நடிகை கங்கனா ரணாவத். இவரின் சொத்து மதிப்பு 75 கோடி இவர் ஒரு படத்தில் நடிக்க வாங்கும் சம்பளம் 10 கோடி முதல் 13 கோடி வரை என்பது குறிப்பிடத்தக்கது.