பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி நாளை நெருங்கி வரும் நிலையில், தற்போது... நேரடியாக ஃபைனலுக்கு செல்லும் ஒரு போட்டியாளரை தேர்வு செய்வதற்காக கடுமையான டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் நடந்து வருகிறது.

இதில் தற்போது பிக்பாஸ் வீட்டில் உள்ள 7 போட்டியாளர்களும் ஃபைனலுக்குள் நுழைய விடாப்பிடியாக மோதி வருகிறார்கள். இதுவரை நான்கு சுற்றுகள் முடிவடைந்த நிலையில், ரம்யா 20 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். இவரை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் ஷிவானியும், மூன்றாவது இடத்தில் ரியோ, நான்காவது இடத்தில் பாலா, ஐந்தாவது இடத்தில் ஆரி, மற்றும் கடைசி இரண்டு இடங்களில் சோம், கேபி ஆகியோர் உள்ளனர்.

இதை தொடர்ந்து 5 வது சுற்றுக்கான போட்டி நடைபெறுவது தான் இன்றைய முதல் புரோமோவில் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து ஆரி படித்து காட்டுகிறார். ஒரு பந்தை வளையத்திற்குள் வைத்து சுற்றி கொண்டே இருக்க வேண்டும். ஒரு வேலை சுற்றுவதை நிறுத்திவிட்டாலோ அல்லது பந்து கீழே விழுந்து விட்டாலோ போட்டியில் இருந்து அவர் வெளியேற வேண்டும் என கூறப்படுகிறது.

விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில், ஆரி, கேபி, பாலா, ஷிவானி, சோம் என அனைத்து போட்டியாளர்களும் பந்தை தவறவிட்ட போதிலும் கடைசி வரை ரியோ நிலைத்து நின்று நிதானமாக விளையாடி, 5 ஆவது சுற்றில் வெற்றி பெறுகிறார். எனினும் இதை தொடர்ந்து வேறு ஏதாவது போட்டிகள் உள்ளதா அல்லது ரியோ நேரடியாக இறுதி போட்டிக்குள் நுழைகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.