தமிழகம் முழுக்க 700க்கும் மேற்பட்ட தியேட்டர்களிலும் சென்னையில் 165 காட்சிகளாக சுமார் 30 தியேட்டர்களிலும் ரிலீஸ் செய்யப்பட உள்ள ரஜினி, ஷங்கர் காம்போவின் ‘2.0’ பட டிக்கட் புக்கிங்குகள் சற்று மந்தமாகவே இருப்பது கண்டு படத்தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், இயக்குநர் ஷங்கர், ரஜினி ஆகியோர் பயங்கர ஷாக் மனநிலையில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

நாளை உலகம் முழுமையும் சுமார் 6000 தியேட்டர்களில் ரிலீஸாகிறது. [10,000 என்பதெல்லாம் படு கப்ஸா]. தமிழகத்தில் மட்டும் சுமார் 700 தியேட்டர்களில் இப்பட்டம் ரிலீஸாகிறது. சில தியேட்டர்களில் திங்களன்றும், சில தியேட்டர்களில் நேற்று செவ்வாயன்றும் ரிசர்வேஷன் துவங்கியது. 

ரஜினி படம் என்றாலே ரிசர்வேஷன் துவங்கியவுடன் முதல் மூன்று நாட்களுக்கு பரபரவென ஹவுஸ்ஃபுல் ஆகிவிடும். பற்றாக்குறைக்கு ஷங்கரும் இருந்தால் சொல்லவும் வேண்டுமா? ஆனால் சற்று அதிர்ச்சியாக ‘2.0’ அவ்வளவு பரபரப்பாக எங்கும் உடனே ஹவுஸ்ஃபுல் ஆகவில்லை. புக்கிங் சற்று மந்தமாகவே காணப்படுகிறது. இன்று காலை வரை கூட சத்யம், மாயாஜால் உட்பட்ட தியேட்டர்களில் டிக்கட்கள் முழுமையாக விற்றுத்தீராமல் இருக்கின்றன.

இன்னொரு பக்கம் கஜா புயல் நிவாரணப் பகுதிகளுக்கு ரஜினி பார்வையிட வராததால், திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்கள் ‘2.0’ படம் பார்க்க கொஞ்சம் கூட ஆர்வம் காட்டவில்லை என்று சொல்லப்படுகிறது.