அத்துடன், கணியன்பூங்குன்றன் என்ற கேரக்டரில் துப்பறிவாளனாக விஷாலும், அவரது உதவியாளர் மனோ என்ற கேரக்டரில் பிரசன்னாவும் நடித்து ரசிகர்களை கொண்டாட வைத்தனர்.  

முதல் பாகத்துக்கு கிடைத்த அசத்தலான வரவேற்பை தொடர்ந்து, மீண்டும் விஷால் - மிஷ்கின் கூட்டணி சேர்ந்துள்ளது. "துப்பறிவாளன்-2" என டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை, முதல் பாகத்தை தயாரித்த விஷாலே தயாரிக்கிறார். 

இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக புதுமுக நடிகை ஆஷ்யா நடிக்கிறார். முதல் பாகத்தில் நடித்த பிரசன்னா, விஷாலுடன் மீண்டும் இணைந்துள்ளார். இசைஞானி இளையராஜா இசையமைக்கும் "துப்பறிவாளன்-2: படத்துக்கு, நிரவ்ஷா ஒளிப்பதி செய்கிறார்.  

இந்தப் படத்தின் ஷுட்டிங் லண்டனில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், விஷால், பிரசன்னா உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றுள்ளனர். ஆரம்பத்தில் மிஷ்கினின் புகைப்படங்களே வெளியான நிலையில், முதல்முறையாக விஷால் மற்றும் பிரசன்னாவின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளன. 

https://twitter.com/VffVishal/status/1199977600187125760
இந்த புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள தயாரிப்பு தரப்பு, கணியன் பூங்குன்றன் மற்றும் மனோ பேக்! இந்த முறை லண்டனில் வேட்டை என பதிவிட்டுள்ளது. டிடெக்டிவ்களுக்கான உடையில் ஸ்டைலாக விஷால், பிரச்சன்னா இருக்கும் இந்த புகைப்படம் லைக்குகளை அள்ளி வருவதுடன், சமூகவலைதளத்திலும் வைரலாகி வருகிறது.