Asianet News TamilAsianet News Tamil

பெரும் நட்சத்திர பட்டாளங்களுடன் "துப்பறிவாளன்-2" படத்திற்கு ரெடியான மிஷ்கின்!

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் 'புரட்சி தளபதி' விஷால் நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான படம் "துப்பறிவாளன்". ஆக்ஷன், திரில்லர் ஜானரில் டிடெக்டிவ் படமாக உருவான இந்தப் படம், ரசிகர்களின் வரவேற்பினால் சூப்பர்ஹிட்டாகி மிஷ்கின் - விஷாலுக்கு கம்பேக் படமாக அமைந்தது. 
 

thupparivala 2 shoot will be start
Author
Chennai, First Published Oct 27, 2019, 8:56 PM IST

இந்தப் படத்தில் விஷாலுடன் பிரசன்னா, ஆண்ட்ரியா, அனு இம்மானுவேல், வினய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 

இதில், கணியன்பூங்குன்றன் என்ற கேரக்டரில் துப்பறிவாளனாக விஷால் நடித்திருந்தது ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. 

thupparivala 2 shoot will be start

முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, "துப்பறிவாளன்-2" படத்தை உருவாக்கும் பணிகளில் மிஷ்கின் ஈடுபட்டுள்ளார். 

தற்போது, அவர் இயக்கத்தில் உருவான உதயநிதியின் "சைக்கோ" படம் நவம்பர் மாத ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில், "துப்பறிவாளன்-2" படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் தேர்வில் மிஷ்கின் பிஸியாக உள்ளார். 

thupparivala 2 shoot will be start

முதல் பாகத்தை தயாரித்த விஷாலே 2-ம் பாகத்தையும் தயாரிக்கிறார். இதேபோல், விஷாலுடன் பிரசன்னாவும் மீண்டும் இணைகிறார். துப்பறிவாளனுக்கு இசையமைத்திருந்த அரோல் கொரோலிக்கு பதிலாக துப்பறிவாளன்-2க்கு இசைஞானி இளையராஜா இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளார். 

நேர்கொண்ட பார்வை, நம்ம வீட்டு ராஜா உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பிரபல ஒளிப்பதிவாளர் நிரவ்ஷா, துப்பறிவாளன்-2வுக்காக மிஷ்கினுடம் இணைந்துள்ளார். 

thupparivala 2 shoot will be start

முதல்பாகத்தில் பாக்யராஜ், சிம்ரன் ஆகியோர் நடித்திருந்த நிலையில், 2-ம் பாகத்தில் ரகுமான், கவுதமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். 
நவம்பர் மாதம் "துப்பறிவாளன்-2" படத்தை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தின் பெரும்பாலான பகுதியை லண்டனில் எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios