ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து கட்சியினரும், சமூக அமைப்பினரும், கல்லூரி மாணவ, மாணவிகளும் ஆர்ப்பாட்டம் போராட்டம், சாலை மறியல், ரயில் மறியல் உள்பட பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக தீர்ப்பு வழங்கமுடியாது என கூறியது. இதனால், தமிழக மக்கள் கொதித்து எழுந்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இதனால், பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

இதற்கிடையில், பீட்டா அமைப்பின் ஆதரவாளரான நடிகை திரிஷா, ஜல்லிக்கட்டு நடத்துவது மிருகவதை என கூறியிருந்தார். இதனால் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
அவரது புகைப்படத்தை பேஸ்புக், வாட்ஸ்அப் ஆகியற்றில் பரப்பி அவர் எச்ஐவி தாக்கி இறந்துவிட்டதாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், சிவகங்கை பகுதியில், திரிஷா நடித்து வந்த திரைப்ப்படத்தின் படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் நடிகை திரிஷாவின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தை, மர்மநபர்கள் யாரோ முடக்கியதாகவும், அதில் திரிஷாவை போல கருத்துகளை பரப்பியதாகவும் தெரிவித்திருந்தார்.
தற்போது அவர், டுவிட்டர் பக்கத்தில் இருந்துவெளியேறியதாகவே தெரியவந்துள்ளது. இனி எந்த நடிகையும், சர்ச்சையை கிளப்பும் கருத்துகளை, டுவிட்டர் பக்கங்களில் தெரிவிக்கமாட்டார்கள் என பொதுமக்கள் கூறுகின்றனர்.
