thrisha lover varunmaniyan marriage

.நடிகை திரிஷாவின் முன்னாள் காதலரும், வெற்றி தயாரிப்பாளர்களில் ஒருவருமான வருண் மணியனுக்கு தற்போது திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை தமிழ் சினிமாவில், இவர் வாயை மூடி பேசவும், காவியத்தலைவன் போன்ற படங்களை தயாரித்திருக்கிறார்.

தொழில் அதிபரான இவர் நடிகை திரிஷாவை காதலித்து திருமணம் செய்துக்கொள்ள இருந்தார், மேலும் இருவருக்கும் கடந்த 2015ம் ஆண்டு நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. பின்னர் திரிஷாவின் நடவடிக்கைகள் பிடிக்காமல் போனதால் திடீரென திருமணம் நின்றுவிட்டது. 

இந்த நிலையில் தற்போது வருண் மணியன், மறைந்த முன்னாள் அமைச்சர் கே.பி. கந்தசாமியின் பேத்தி கனிகா குமரன் என்பவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்திகள் வந்துள்ளது.
இவர்களது திருமணம் அக்டோபர் மாதம் சென்னையில் நடக்க இருக்கிறது.