அஜீத்தின் ‘நேர்கொண்ட பார்வை’படம் தொடர்பான விமர்சனம் ஒன்று பலத்த எதிர்ப்புகளுக்கு ஆளாகி வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இந்த விவாதத்தில் சித்தார்த், நஸ்ரியா போன்ற முன்னணி நட்சத்திரங்களும் பங்குகொண்டு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துவருகிறார்கள்.

பொதுவாக ரிலீஸ் தினம் அல்லது அதற்கு அடுத்த தினத்தில் போடப்படும் அஜீத் படங்களின்  பிரிவியூ என்ன காரணத்தாலோ பட ரிலீஸுக்கு இரு தினங்களுக்கு முன்பே,அதாவது நேற்று 6ம் தேதி காலை 10 மணிக்கே போடப்பட்டது. படத்துக்கு எதிர்பார்ப்பு சற்று குறைவாக இருப்பதால் முன்கூட்டியே விமர்சனங்கள் வரட்டும் என்று அஜீத்தும் படக்குழுவினரும் நினைத்திருக்கக்கூடும் என்று பத்திரிகையாளர்கள் அந்நிகழ்வில் பேசிக்கொண்டனர்.

இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர்கள் பிஸ்மி, அந்தணன், சக்திவேல் ஆகியோர் நடத்தி வரும் ‘வலைப்பேச்சு’என்னும் யூடியூப் வலைதளத்தில் நேற்று ‘நேர்கொண்ட பார்வை’படம் தொடர்பாக காரசாரமாக விமர்சனம் செய்திருந்தார்கள். அந்த விமர்சனத்தின் ஒரு பகுதியில் பார்களில் குடிக்கும்  அந்தமாதிரிப்பெண்களுக்கு என்ன நடந்தா நமக்கென்ன என்றுதான் தோணுகிறது ரீதியில் அவர்கள் விமர்சிக்கவே பெண்போராளிகள், நடிகர்,நடிகைகள் ,டி.வி.பிரபலங்கள் கொதித்து எழத்தொடங்கியுள்ளனர். ட்விட்டர் முழுக்கவே தற்போது வலைப்பேச்சு தொடர்பான பஞ்சாயத்துகளே அத்தனை கெட்ட வார்த்தைகளுடன் முதலிடம் பிடித்து வருகின்றன.

இன்னும் உச்சபட்சமாக டி.வி.தொகுப்பாளினி ஜாக்குலின் ஃபெர்ணாண்டஸ்,..அவங்க மூனு பேரையும் அரெஸ்ட் பண்ணி உள்ள போடுங்க சார்’என்று பயங்கர டெனசனுக்கு ஆளாகியிருக்கிறார். இது போன்ற பல சம்பவங்களை ஏற்கனவே பார்த்த வலைப்பேச்சு வாலிபர்கள் முதல் முறையாக தங்கள் விமர்சனத்துக்கு வருத்தம் தெரிவித்து அப்பகுதியையும் நீக்கிவிட்டார்கள். ஆனாலும் அஜீத் ரசிகர்களின் அட்டாக் நின்றபாடில்லை.