பிக்பாஸ் சீசன் 2, நிகழ்ச்சியில் அடிக்கடி சண்டை வந்தாலும், போட்டியாளர்கள் தங்கள் நிஜ முகத்தை மறைத்துக் கொண்டு, கோப தாபங்களை அடக்கி போலியாக விளையாடி வருவதால் நிகழ்ச்சி, உண்மை தன்மையோடு இல்லை என ரசிகர்கள் பலர் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

 

இந்நிலையில் தற்போது 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகர் கார்த்தி, படத்தின் இயக்குனர் பாண்டிராஜ், மற்றும் காமெடியன் சூரி ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்கு, மேள தாளம் முழங்க, ஆட்டம் பாட்டத்தோடு வருகை தருகிறார்கள்.

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ மூலம் இது உறுதியாகியுள்ளது. வீட்டின் உள்ளே நுழைந்ததுமே மஹத் சூரியை பார்த்து, மாப்பிள்ளை எப்படி இருக்க என கேட்க, அதற்கு சூரி நீ உள்ளே இருப்பதால் நான் நல்லா தான் இருக்கேன் என காமெடிக கூறுகிறார்'.

நடிகை யாஷிகா, உள்ளே வந்த பிரபலங்கள் யார் என்று தெரியாமல் முழிக்கிறார். பின் பிக்பாஸ் வீட்டை கடைக்குட்டி சிங்கம் பட குழுவினருக்கு போட்டியாளர்கள் சுற்றி காட்டுகிறார்கள். அப்போது இயக்குனர் பாண்டிராஜ் மஹத்திடம் 'உன் பெட் இங்க இருக்கும் போது நீ ஏன் ஆட்டோ பிடிச்சி அங்க போய் தூங்குற என கேள்வி கேட்க, எப்போதாவது வருவாரு என தாடி பாலாஜி பதில் கமென்ட் கொடுக்கிறார். 

இதனால், இன்று கடைக்குட்டி சிங்கம் குழுவினருடன் பிக்பாஸ் போட்டியாளர்கள் பொழுது நன்றாக போகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.