thittam pottu thirudura koottam trailer released...

கயல் சந்திரன், பார்த்திபன் நடிப்பில் உருவாகி வரும் "திட்டம் போட்டு திருடுற கூட்டம்" படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.

அறிமுக இயக்குநர் சுதரின் படைப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’.

இதில் கயல் சந்திரன், சாட்னா டைடஸ், பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்திற்கு அஸ்வத் இசையமைத்துள்ளார்.

மார்டின் ஜோ ஒளிப்பதிவு செய்துள்ளார்.

‘அக்ராஸ் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் பிரபு வெங்கடாச்சலமுடன் இணைந்து ‘டூ மூவி பஃப்ஸ்’ நிறுவனம் சார்பில் ரகுநாதன்.பி.எஸ் தயாரித்து வருகிறார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியானது அந்த அளவு யாருக்கே தெரியவில்லை. ஏனென்றால் அப்போ எல்லாருக்கும் மெர்சல் ஃபீவர்.

இந்த நிலையில் இந்தப் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. கொள்ளை அடிப்பதை கதைக் கருவாக கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. டிரைலரின் இறுதியில் இவர்கள் "உலகக் கோப்பை" கொள்ளையடிக்க திட்டமிட்டுக் கொண்டிருப்பது போன்று காட்சி அமைக்கப்பட்டுள்ளது. நீங்களும் டிரைலரை பாருங்கள் உங்களுக்கும் பிடிக்கும்.