சமீபத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலதாவின் மறைவு பொதுமக்கள் மட்டும் இல்லாமல் திரையுலகத்தை சேர்த்த பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்த நேரில் திரிஷா வந்திருந்தாலும் மிகுந்த கூட்ட நெரிசலில் சிக்கியதால் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

பின் அடுத்த நாளே உடனடியாக சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினாலும், ஒரு சில நாட்களில் மீண்டும் அங்கு சென்று மரியாதை செலுத்தினார் என்பது அனைவரும் அறிந்தது தான்.

 நடிகை விந்தியா அவரது வாழ்க்கையை புத்தகமாக எழுதி வெளியிட போகிறேன் என்று ஏற்கனவே அறிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக்கினால் நான் நடிப்பேன் அது எனது கனவு என்று நடிகை ரம்யா கிருஷ்ணன் கூறியுள்ளார், ஏற்கனவே ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவின் தோற்றத்தில் இருப்பது போல சில புகைப்படங்கள் வலை தலத்தில் உலா வந்தது.

மேலும் நடிகை த்ரிஷா ஜெயலலிதாவை மையமாக கொண்டு எடுக்க படும் படத்தில் நடிப்பதாக ஆங்காங்கே பேச்சுக்கள் நிறைய அடிபடுகிறது.

ஆனால் அப்படி ஒரு படம் வருமா? யார் எடுக்க போகிறார்கள்? அதில் நடிக்க பொருத்தமான நடிகை யார் என இப்போதே பலர் பேசி வருகின்றனர். 

ஒரு வேலை அப்படி ஒரு படம் எடுக்கப்பட்டால் அந்த படத்தில் நடிகை திரிஷா நடிப்பாரா என சந்தேகம் தான், காரணம் ஜெயலலிதாவின் முக தோற்றத்திற்கு திரிஷா பொருந்த மாட்டார் என கிசுகிசுக்க படுகிறது.