பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாராவாரம் நடக்கும் எலிமினேஷனில் கடந்த வாரம் மகத் வெளியேறினார். மகத் எலிமினேட் ஆக வேண்டும் என்பது தான் மக்களின் விருப்பமாகவும் இருந்தது. அதை தான் பிக் பாஸும் நிறைவேற்றி இருக்கிறார். இதில் இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டுக்கு எப்படியும் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா வர வேண்டும் என மக்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். 

ஆனால் நடந்ததோ வேறு. வழக்கம் போல ஐஸ்வர்யாவை காப்பாற்ற நினைத்த பிக் பாஸ், டாஸ்க் ஒழுங்காக செய்யவில்லை என காரணம் காட்டி ஜனனி , பாலாஜி மற்றும் டேனியை பிக் பாஸ் எலிமினேஷன் லிஸ்டில் நிக்க வைத்திருக்கிறார். இதில் ஜனனிக்கு பெரிய அளவிலான ரசிகர்கள் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கின்றனர். இதனால் இந்த கண்ணழகியை இந்த வாரம் எலிமினேட் செய்ய முடியாது என்பது உறுதி அடுத்ததாக இருப்பது பாலாஜியும், டேனியும் தான்.

பாலாஜி மீது என்ன தான் அடிக்கடி கடுப்பானாலும் அவருக்கு எனவும் ஒரு ரசிகர் கூட்டம் பிக் பாஸில் இருக்க தான் செய்கிறது. அடிக்கடி பீப் வசனங்கள் இவர் வாயில் இருந்து ஒலித்தாலும் செண்டிமெண்டிலும் எப்படியாவது ஸ்கோர் செய்துவிடுவார் இவர். இதனால் பாலாஜியும் இந்த வாரம் எலிமினேட் ஆவதற்கான வாய்ப்பு குறைவு தான்.

ஆனால் டேனி விஷயம் அப்படி இல்லை. டேனி ஏற்கனவே பல குள்ளநரித்தனங்களில் பிக் பாஸ் வீட்டில் அரங்கேற்றி, நரி என்ற பட்டத்தையே வாங்கி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் பிக் பாஸ் வீட்டினுள் நடக்கும் பல சண்டைகளுக்கு இவர் தான் மறைமுக காரணமே. இவை எல்லாம் சக போட்டியாளர்கள் அறிந்திராவிட்டாலும் மக்கள் அறிவார்கள். இதனால் டேனிக்கு அவ்வளவு நல்ல பெயர் இந்த நிகழ்ச்சியில் கிடையாது. 


மேலும் பிக் பாஸில் ஒவ்வொரு வாரமும் யார் வெளியேறப்போகிறார் என பொதுவாக நடத்தப்படும் கருத்துகணிப்பிலும் டேனியின் பெயர் தான் வந்திருக்கிறது. எலிமினேஷனுக்கான நாள் நெருங்கிவிட்டதால் இனி இந்த விஷயத்தில் பெரிய அளவிலான மாற்றம் எதுவும் வர வாய்ப்பில்லை. அப்படியே டேனி வெளியேறவில்லை என்றால் அடுத்த இடத்தில் பாலாஜி தான் நிச்சயமாக ஜனனி எலிமினேட் ஆக மாட்டார் என்பது மட்டும் உறுதி.