this upcoming Tamil film mocks the entire Tamil films

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில், 2010-ஆம் ஆண்டில் திரைக்கு வந்தது தமிழ் படம். இந்த படத்தில் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையும் எக்கச்சக்கமாகா கேலி செய்திருந்தார் சி.எஸ் அமுதன். ஒரு பக்கம் பாஸிடிவ், மறு பக்கம் நெகடிவ் என கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம், வசூல் ரீதியாக நல்ல பலனை கொடுத்தது.

அதனை தொடர்ந்து சி.எஸ். அமுதன் தமிழ் படத்தின் இரண்டாம் பாகத்தை இப்போது இயக்கி இருக்கிறார். விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. தமிழ் படத்தின் இரண்டாம் பாகத்திலும் மிர்ச்சி சிவா தான் நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் திரைப்படங்களை மட்டும் கலாய்க்காமல், சமீபகாலமாக நடந்துவரும் அரசியல் கூத்துக்களையும் வெகுவாக கலாய்த்திருக்கிறார் அமுதன். அதிலும் முதல் ஃப்ரேமிலெயே சிவாவாகிய நான் என கண்கலங்கியபடி பதவி ஏற்க்கும் மிர்ச்சி சிவாவை பார்க்கும் போது அப்பட்டமாக தெரிகிறது எந்த அரசியல்வாதியை அவர்கள் கலாய்க்கிறார்கள் என்று.

அஜீத்தின் மங்காத்தா, விஜய்-ன் தலைவா,கத்தி என ஒரு படத்தை கூட விடாமல் கலாய்த்திருக்கிறார்கள். இதில் விஷாலின் துப்பறிவாளன் படமும் அடங்கும். ஆனால் விக்கிரம்வேதாவை கலாய்த்திருக்கும் விதம் கொஞ்சம் டூ மச். ஒட்டு மொத்தமாக படம் ரிலீசாகும் போது தான் தெரியும் எப்படிப்பட்ட சர்ச்சைகளில் எல்லாம் சிக்கப்போகிறது இந்த தமிழ்படம் 2.0 என்று.