சாமி ஸ்கொயர் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்த்த, படக்குழுவினருக்கு எக்கச்சக்கமாக பல்பு தான் கிடைத்திருக்கிறது. அதிலும் இந்த டீசரை இணையத்தில் ஏகமாக கலாய்த்து வருகின்றனர் இளசுகள். கமெர்ஷியல் படங்கள் என்றாலே மசாலா கொஞ்சம் அதிகம் இருக்கும் தான். ஆனால் டீசரிலேயே ஒரு முழு படத்துக்கான மசாலாவையும் கொட்டி தீர்த்திருக்கிறார் சாமி ஸ்கொயர் ஹரி.

சாமி படத்தின் முதல் பாகம் ஏற்படுத்தி இருந்த எதிர்பார்ப்பில், இந்த சாமி ஸ்கொயர் டிசரை பார்த்த விக்ரம் ரசிகர்கள் மிகவும் அப்செட் ஆகி இருக்கின்றனர். இதற்கெல்லாம் காரணம் அதில் இடம் பெற்றிருந்த வசனங்கள் தான். மற்றபடி டீசர் சூப்பரோ சூப்பர். என்றும் ஒரு தரப்பினர் தெரிவித்திருக்கின்றனர்.

இப்படி கலவையான விமர்சனங்களை பெற்றாலும், சாமி ஸ்கொயர் டீசரை அதிக அளவிலான பார்வையாளர்கள் பார்த்திருக்கின்றனர். பார்த்ததுடன் நில்லாமல் சிலர் டிஸ்லைக்கும் செய்திருக்கின்றனர். விக்ரம் படங்களிலேயே அதிகம் டிஸ்லைக் வாங்கிய டீசர் இது தான். என்று இப்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் இந்த டீசருக்கு பார்வையாளர்கள் அதிகம் என்பது, வேதனையிலும் மகிழ்ச்சி அளித்திருக்கிறது சாமி ஸ்கொயர் படக்குழுவிற்கு.

இந்த திரைப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக, கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். வில்லனாக பாபி சிம்ஹாவும், காமெடிக்கு சூரியும் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தை, இயக்குனர் ஹரி இயக்கி இருக்கிறார்.