மாஸ்டர் பட வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் 3 முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி வரும் திரைப்படம் ‘விக்ரம்’. இந்த படத்தின் படத்தின் ஷூட்டிங் சென்னையில் மிகவும் எளிமையான முறையில் தொடங்கியது. இதில்  இயக்குனர் லோகேஷ், நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி ஆகியோர் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியது.  

மேலும் ஜூலை 10ம் தேதி இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது அதில், விஜய் சேதுபதி, கமல், ஃபகத் பாசில் ஆகிய மூவரின் முகமும் இடம் பெற்றிருந்தது. உலக நாயகன் உடன் நடிப்பில் பட்டையைக் கிளப்பும் நடிகர்களான ஃபகத் பாசில், விஜய் சேதுபதி இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறியுள்ளது. அரசியலில் தீவிரம் காட்டி வந்த கமல் நீண்ட இடைவெளைக்குப் பிறகு ஷூட்டிங்கில் பங்கேற்றதால் ஒரு மாணவன் போல் உணர்கிறேன் என உருக்கமாக தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது படப்பிடிப்பு படுஜோராக நடந்து வரும் நிலையில், அடுத்து இந்த படத்தில் நடிக்க உள்ளது யார் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வம் காட்டி வந்தனர். சமீபத்தில் இந்த படத்தில் உலக நாயகன் கமல் ஹாசனுக்கு மகனாக மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியானது. இருவரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு படக்குழுவும் இந்த தகவலை உறுதி செய்தது.

இவரை தொடர்ந்து இந்த படத்தின் போஸ்டரில் இடம் பெற்ற 'code Red ' என்கிற வார்த்தையை பயன்படுத்தி பிரபல நடிகை ஆண்ட்ரியா புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளதால், இவர் தான் இந்த படத்தின் நாயகியா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. இவர் தான் நாயகியா? என நெட்டிசன்கள் பலரும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஏற்கனவே விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 , மற்றும் உத்தம வில்லன் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆண்ட்ரியா 'விக்ரம்' படத்திலும் இணைவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

View post on Instagram