this actor asked his friends to take the fitness challenge

விஜய் தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில், டைட்டிலை வென்றவர் ஆரவ். இவர் டைட்டில் வின்னராக பிரபலமானதை விட, ஓவியாவால் தான் அதிகம் பிரபலமானர்.

இவர் தற்போது ”மீண்டும் வா அருகில் வா” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு பிக் பாஸ் புகழ் கணேஷ் வெங்கட்ராமன் டிவிட்டரில் ஒரு சவால் விடுத்திருக்கிறார்.

Scroll to load tweet…

”தொடர்ந்து 15 புஷ் அப்ஸ் நான் செய்திருக்கிறேன் இந்த வீடியோவில், அதே போல நீங்களும் செய்ய முடியுமா?” என ஆரவ், கெளதம் கார்த்திக் மற்றும் ஹரீஷ் கல்யாண் ஆகியோரிடம் டிவிட்டரில் கேட்டிருக்கிறார் கணேஷ் வெங்கட்ராமன். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதும் கூட இவர் எப்போதும் உடற்பயிற்சியிலும் தியானத்திலும் தான் இருந்தார் என்பது, பிக்பாஸ் ரசிகர்களுக்கு நியாபகமிருக்கும்.

சமீபத்தில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி, பிரதமர் மோடிக்கு விளையாட்டாக ஒரு ஃபிட்னஸ் சேலஞ்சை விடுத்தார். அதனை பிரதமர் மோடியும் விளையாட்டாக செய்து காட்டினார்.

அதை தொடர்ந்து இப்போது பல்வேறு திரைத்துறை பிரபலங்களும் இது போன்ற ஃபிட்னஸ் சேலஞ்சை, தங்கள் திரையுலக நண்பரக்ளுக்கு கொடுத்து வருகின்றனர். சமீபத்தில் கூட மலையாள நடிகர் மோஹன்லால், இது போன்ற ஒரு ஃபிட்னஸ் சேலஞ்சை ஏற்றுக்கொண்டு, செய்து காட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.