பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களின் மிக பெரிய ஆதரவை பெற்று வசூலை அல்லி குவித்த படம் 'பேட்ட'. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக சிம்ரன் மற்றும்  த்ரிஷா ஆகிய இருவரும் நடித்திருந்தனர்.

இந்த படம் மீண்டும் திரையுலகில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள போராடிய, சிம்ரனுக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. த்ரிஷாவும் மாறு பட்ட கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் 'மாயன்' என்கிற ஆக்ஷன் படத்தில் நடிக்க உள்ளனர். இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தை 'ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பெரிய பொருள் செலவில் தயாரிக்க உள்ளது. 

மேலும் இந்த படத்தை சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கவிருப்பதாகவும், இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளிவரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக முக்கிய வேடங்களில் நடித்து வரும் த்ரிஷா, சிம்ரன் ஆகியோர்களுக்கு இந்த படம் ஒரு மறக்க முடியாத படமாக இருக்கும் என படக்குழுவினர் கூறியுள்ளனர்.