கோலிவுட்டின் முன்னனி விநியோகிஸ்தர்ரான திருப்பூர் சுப்பிரமணியன், பல வெற்றி படங்களை விநியோகிஸ்தராக இருந்துள்ளார்.

தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் ரெமோ படத்தின் விநியோகஸ்தர்ரும் இவர் தான்.

இவர் சமீபத்தில் பல அதிர்ச்சி செய்திகளை வெளியிட்டுள்ளார். இவர் பேசுகையில் ‘சிவகார்த்திகேயனுக்கு பிரச்சனை தரும் பல நடிகர்கள் பெயரை நான் இங்கே சொல்லட்டுமா?’ என கேள்வி எழுப்பி உள்ளார்.ஆனால், அதை தொடர்ந்து அந்த பேச்சை அவர் நிறுத்திவிட்டார்.

 பிறகு விஷால் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து நடந்ததாக சொல்கிறாரே?, அவரை என் முன் வந்து பேச சொல்லுங்கள். அவர் படத்திற்கே நான் எத்தனை உதவி செய்திருப்பேன், எப்படி பேச மனது வருகிறது.

அதேபோல் சிம்புவின் வாலு படத்தை வெளியிட நான் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன் என டி.ஆரிடம் போய் சிம்புவை கேட்க சொல்லுங்கள் என செம்ம ரைடு விட்டுள்ளார்.