thief case filed actor vishal
துணை இயக்குனராக தமிழ் சினிமாவில் தன்னுடைய பயணத்தை தொடங்கிய விஷால், பின் நடிகர் சங்க பொது செயலாளர், தயாரிப்பு சங்க தலைவர் என பல்வேறு பரிமாணங்களில் பிரதிபலித்து வருகிறார்.
இந்நிலையில்விஷால் உட்பட 11 தயாரிப்பாளர்கள் மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் பாபு கணேஷ் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
இந்த மனுவில் தமிழ் திரைப்பட கூட்டுறவு வீட்டு வசதி சங்க ஆவணங்களை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் விஷால், கவுதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், ஞானவேல்ராஜா, பாண்டிராஜ் உள்ளிட்டோர் மீதும் புகார் அளிக்கப்பட்டது.
