these famous theatres say no to release super stars movie

காலா திரைப்படம் நாளை உலக அளவில் பிரம்மாண்டமாக ரிலீசாக இருக்கிறது. கடும் எதிர்ப்பு நிலவிய கர்நாடகாவில் கூட, 130 திரையரங்கங்களில் காலா ரிலீஸ் ஆக இருக்கிறது. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் இந்த திரைப்படம், ஆரம்பத்தில் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தது. நிச்சயமாக இது சூப்பர் ஹிட் கொடுக்கப்போகிறது. பாக்ஸ் ஆஃபீஸ் திணறப்போகிறது என்ற எதிர்பார்ப்பில் இருந்த காலா படக்குழு, இப்போது மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டு வருகிறது.

வழக்கமாக ரஜினி பட டிக்கெட்டுகளுக்கு தனி மதிப்புதான். 1000, 2000 ரூபாய் கொடுத்து கூட டிக்கெட் வாங்க தயாராக இருக்கும் ரஜினி ரசிகர்கள், இம்முறை 500, 700 ரூபாய்க்கு கூட டிக்கெட் வாங்க ஆர்வம் காட்டவில்லை. ரசிகர்களே இப்படி என்றால் மக்கள் இருக்கும் மனநிலையில், கண்டிப்பாக காலா வசூலில் லாபம் பார்க்குமா? என தெரியவில்லை.

காலா பிரமோஷனுக்காக படக்குழுவும் பல்வேறு முயற்சிகளையும் செய்து தான் வருகிறது. ஆனால் காலா டிக்கட் புக்கிங் நாளுக்கு நாள் குறைந்து வருகிறதே தவிர, பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லை. முதல் நாள் 73%ஆக இருந்த டிக்கெட் பதிவு, இப்போது 11%ஆகி இருக்கிறது. இப்படி ஒரு நிலை இதுவரை ரஜினி படத்திற்கு ஏற்பட்டதே இல்லை.

இந்நிலையில் தமிழகத்தில் இருக்கும் இரண்டு பிரபலமான திரையரங்கங்களான கமலா மற்றும் உதயம் தியேட்டர்கள், இந்த திரைப்படத்தை திரையிடவில்லை. வியாபார ரீதியாக காலா வெற்றியை தருமா? என தெரியவில்லை எனவே ரிஸ்க் எடுக்க நாங்கள் தயாராக இல்லை. என இந்த திரையரங்க உரிமையாளர் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.