Asianet News TamilAsianet News Tamil

சர்காரை வெளியிட மறுத்த தியேட்டர்... மிஸ்டர் விஜய் நீதி நேர்மை எல்லாம் சினிமாவுல மட்டும்தானா?

நடிகர் விஜய் அவர்களே உங்கள் நீதி போதனைகள் சினிமாவுக்கு மட்டும்தானா? பொதுவாழ்வில் அதைக் கடைப்பிடிக்கமாட்டீர்களா?? என்கிற கேள்விகளுடன் தமிழக தியேட்டர் ஒன்று ‘சர்கார்’ படத்தை ரிலீஸ் செய்ய மறுத்துள்ளது.

Theater refused to release Sarkar
Author
Tanjore, First Published Nov 5, 2018, 12:33 PM IST

நடிகர் விஜய் அவர்களே உங்கள் நீதி போதனைகள் சினிமாவுக்கு மட்டும்தானா? பொதுவாழ்வில் அதைக் கடைப்பிடிக்கமாட்டீர்களா?? என்கிற கேள்விகளுடன் தமிழக தியேட்டர் ஒன்று ‘சர்கார்’ படத்தை ரிலீஸ் செய்ய மறுத்துள்ளது. Theater refused to release Sarkar

’சர்கார்’படத்தின் டிக்கெட் விலை முதல் இரண்டு நாட்களுக்கு அரசு ஆணையையும் மீறி 2000முதல் 5000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இது குறித்து வெளிப்படையாக ட்வீட் பண்ணியுள்ள தஞ்சாவூர் ராணி பேரடைஸ் தியேட்டர் நிர்வாகம்,...’ முதல் இரண்டு நாட்களுக்கு டிக்கட் விலையை 200 ரூபாய்க்கு மேல் தான் விற்கவேண்டும் என்ற விநியோகஸ்தரின் நிபந்தனையில் எங்களுக்கு உடன்பாடு இல்லாததால் எங்கள் தியேட்டரில் நாங்கள் ‘சர்கார்’ படத்தைப் போட விரும்பவில்லை.

நாங்கள் எப்போதும் தரமான நல்ல சினிமாவை நியாய தர்மங்களுக்கு உட்பட்டே திரையிட விரும்புகிறோம். நடிகர் விஜய் நல்ல விஷயங்களை சினிமாவில் பேசினால் மட்டும் போதாது. அதை சொந்த வாழ்விலும் கடைப்பிடிக்கவேண்டும்’ என்கிறது அந்த ட்வீட். Theater refused to release Sarkar

ஒரு சாதாரண தியேட்டர்காரர்களிடம் இருக்கும் நியாய தர்ம சிந்தனைகள் வருங்கால முதல்வர்களிடமும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாதுதான்.

Follow Us:
Download App:
  • android
  • ios