கடந்த ஆண்டு தளபதி விஜய்-ன் நடிப்பில் கோலிவுட்டையே மெர்சலாக்கிய திரைப்படம் மெர்சல். அட்லீ இயக்கத்தில் மூன்று வேடங்களில் விஜய் நடித்திருந்த இந்தப்படம் வசூல் ரீதியாக மெகா ஹிட் கொடுத்தது இது அனைவரும் அறிந்தது தான்.
கடந்த ஆண்டு தளபதி விஜய்-ன் நடிப்பில் கோலிவுட்டையே மெர்சலாக்கிய திரைப்படம் மெர்சல். அட்லீ இயக்கத்தில் மூன்று வேடங்களில் விஜய் நடித்திருந்த இந்தப்படம் வசூல் ரீதியாக மெகா ஹிட் கொடுத்தது இது அனைவரும் அறிந்தது தான். இந்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இடையில் ஆளப்போறான் தமிழன் பாடல் உலகத்தமிழர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது. தமிழர்களுக்கே உரித்தான பாடல் இது என்று அட்லீ கூட ஒரு பேட்டியின் போது குறிப்பிட்டிருந்தார்.
அந்த அளவிற்கு தமிழர்களின் நாடி நரம்புகளில் தமிழ்வெறியை ஊறச்செய்த பாடலாக இந்த பாடல் அமைந்திருந்தது. இந்த பாடலை எழுதியவர் பிரபல பாடலாசிரியர் விவேக் தான். தற்போது தளபதி விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்திருக்கிறார். இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் இந்த திரைப்படத்தை தான் தளபதி ரசிகர்கள் அனைவரும் ஏகபோகமாக வரவேற்றிட காத்திருக்கின்றனர்.

இந்த சர்கார் படமும் அரசியலை கதைக்களமாக கொண்ட புரட்சிகரமான படம் தான். இந்த படத்தில் விஜய் மிகவும் வெயிட்டான ரோலில் நடித்திருக்கிறார். அந்த கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப தெறிக்கவிடும் பாடல்கள் இந்த படத்திலும் இடம் பெற்றிருக்கின்றன. மெர்சலில் ஆளப்போறான் தமிழன் பாடலை எழுதிய விவேக், இந்த படத்திலும் அதே போல உணர்சி பொங்கும் பாடம் ஒன்றினை எழுதி இருக்கிறார்.

அந்த உணர்ச்சி பொங்கும் வரிகள் என்ன என தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டி வரும் ரசிகர்கள் அவரிடம் அது என்ன பாடல் என கேட்டு நச்சரித்து வருகின்றனர். அப்படி ஒரு ரசிகருக்கு பதிலளித்திருக்கும் விவேக, ”இப்படியெ கேட்டா நான் வாய் தவறி பாடல் வரிகளை சொல்லிடுவேன் போல இருக்கே. பிறகு சன்பிக்சர்ஸ் என்னை கேள்வி கேட்டா நான் உங்க ஐடி தான் கொடுப்பேன்” என டிவிட்டரின் கூறி இருக்கிறார். இதனால் மெர்சல் ரசிகர்களுக்கு இன்னொரு அதிரடி சரவெடி பாடம் சர்காரில் இருக்கிறது என்பது உறுதியாகி இருக்கிறது. அந்த பாடல் மட்டும் ரிலீசாகி விட்டால் தளபதி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.
