’2.0’ படம் ஒரே வாரத்துல 400 கோடி ரூபாய் வசூல் பண்ணிடுச்சாம்... யார் சொன்னா?  லைகா புரடக்‌ஷன்ஸே சொன்னாங்க....

‘மிஸ்டர் சுபாஷ்கரன் ‘2.0’ தான் நாலே நாள்ல 400 கோடி வசூல் பண்ணிடுச்சே. அப்புறம் ஏன் கண்ணுல கண்ணீர் வருது?  அது வலி வேற டிபார்ட்மெண்ட்...

இந்த இரண்டே டயலாக்குகளில் ‘2.0’வின் ஒரிஜினல் வசூல் லட்சணம் விளங்கும். இந்தப் படம் என்றில்லை. சினிமாவில் கொஞ்சம் வசதியானவர்கள் எல்லாக்காலத்திலும் தங்கள் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதற்காக ஓடாத படத்திற்கு நட்சத்திர ஓட்டல்களில் சக்சஸ் பார்ட்டி வைப்பதும், தியேட்டர்காரர்களுக்கு வீம்பாய் வாடகை கொடுத்து 100 நாட்கள் ஓட்டுவதும் இன்று நேற்றா நடக்கிறது.

‘2.0’வைப் பொறுத்தவரையில் படம் இரண்டாவது நாளே செத்த குருவியாகி விட்டது. அரசியல் பிசினஸ் ஆரம்பித்திருக்கும் இந்த நேரத்தில், அதுவும் அடுத்த மாதமே இன்னொரு ரிலீஸ் வைத்திருக்கும் நேரத்தில் ஒரு தோல்விப் படம் என்று சரண்டராகிவிட்டால் ‘பேட்ட’ வாசல் மூடிக்கொண்டு விடாதா?

விளைவு. நஷ்டம், வலியெல்லாம் வேற டிபார்ட்மெண்ட். நீ படம் ஹிட்டுன்னு பிரஸ் ரிலீஸ் கொடு கண்ணா. மறுபடியும் ஒரு தடவை கால்ஷீட் தந்து கணக்கு பாத்துக்கலாம் என்று ரஜினி சுபாஷ்கரனை உசுப்பிவிட, அடுத்த வாரம் 800 கோடி வசூல் வரைக்கும் பார்க்கத்தான் போறீங்க.