Asianet News TamilAsianet News Tamil

'அண்ணாத்த' படத்தில் எஸ்.பி.பி பாடிய கடைசி பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு (Rajinikanth) பல படங்களில் பின்னணி பாடியுள்ள பாடும் நிலா எஸ்.பி. பி, (SPB ) கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்காகவே, 'அண்ணாத்த' படத்தில் பாடியுள்ள நிலையில், இந்த பாடல் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

The release date of the last song sung by SBP in  Annaatthe movie has been announced
Author
Chennai, First Published Oct 1, 2021, 7:24 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பல படங்களில் பின்னணி பாடியுள்ள பாடும் நிலா எஸ்.பி. பி, கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்காகவே, 'அண்ணாத்த' படத்தில் பாடியுள்ள நிலையில், இந்த பாடல் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி முதல் சென்னை சூளை மேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் செப்டம்பர் 25 ஆம் தேதி  காலமானார். இதை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் 'அண்ணாத்த' படத்தின் ஆரம்ப பாடலை எஸ்.பி.பி தன்னுடைய இசையில் பாடியுள்ளார் என்று இமான் தெரிவித்தார்.

The release date of the last song sung by SBP in  Annaatthe movie has been announced

அண்ணாத்த' திரைப்படம் லாக் டவுன் பிரச்சனைக்கு பின், மீண்டும் ஹைதராபாத்தில் துவங்கிய நிலையில், கடந்த மே மாதம், ரஜினி நடிக்க வேண்டிய அனைத்து காட்சிகளும் படமாக்கி முடிக்கப்பட்ட நிலையில், தனி விமானத்தின் மூலம் சென்னை திரும்பினார். மீதம் இருந்த காட்சிகளும் எடுத்து முடிக்கப்பட்டு, தற்போது போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

The release date of the last song sung by SBP in  Annaatthe movie has been announced

வரும் தீபாவளிக்கு இந்த படம் வெளியாகவுள்ள நிலையில், 'அண்ணாத்த' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இப்படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இந்த படத்தில்... சூப்பர் ஸ்டாருக்காக எஸ்.பி.பி பாடிய கடைசி பாடல் வெளியாகும் தேதி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

The release date of the last song sung by SBP in  Annaatthe movie has been announced

'அண்ணாத்த' திரைப்படத்தின் இன்ட்ரோ பாடலான இந்த பாடல் வரும் 4ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

 

 

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios