The red horn of Sasi directed by GV Prakash and Siddharth

தமிழகத்தின் வீர விளையாட்டுகளில் ஒன்று சல்லிக்கட்டு. இந்தப் போட்டிக்காக தமிழகமே போராட்டத்தில் இறங்கியது. போராட்டம் வெற்றிகரமாக நடந்த நிலையில் கோலிவுட் திரையுலகினர் சல்லிக்கட்டு குறித்தே அதிக திரைப்படங்களை எடுத்து வருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

விஜய்யின் ‘மெர்சல்’, விஜய் சேதுபதியின் ‘கருப்பன்’ ஆகிய படங்களும் சல்லிக்கட்டைப் பற்றி கூறுகின்றன.

இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு சல்லிக்கட்டு படம் உருவாகிவுள்ளது.

இயக்குனர் சசி ‘ரெட்டை கொம்பு’ என்ற தலைப்பில் சல்லிக்கட்டு சம்பந்தமாக ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

இயக்குனர் சசி கடைசியாக விஜய் ஆண்டனியை வைத்து இயக்கிய படம் ‘பிச்சைக்காரன்’. இந்தப் படம் தமிழிலும், தெலுங்கிலும் சக்கைபோடு போட்டது.

இயக்குனர் சசி, ஜி.வி.பிரகாஷ் மற்றும் சித்தார்த் நடிக்கும் படம் ஒன்றை இயக்குவதாக ஏற்கனவே செய்தி வெளி வந்தது.

தற்போது இந்தப் படத்திற்கு ‘ரெட்டை கொம்பு’ என்று தலைப்பு வைத்துள்ளார்.

இந்தப் படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

‘ரெட்டை கொம்பு’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது என்பது கொசுறு தகவல்.