the producer of super stars movie gave the jeep to this company

காலா திரைப்படம் நேற்று உலக அளவில் பிரம்மாண்டமாக ரிலீசாகியது. ரஞ்சித் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணியில் இரண்டாவதாக உருவான திரப்படம் தான் காலா. இந்த காலா திரைப்படம் கடும் எதிர்ப்புகளையும், சவால்களையும், தாண்டி திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. காலா படத்தின் கதையும், அதை ரஞ்சித் இயக்கி இருக்கும் விதமுமே, இந்த வரவேற்புக்கு காரணம்.

இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் அணிந்திருக்கும் கருப்பு வேட்டி சட்டை எவ்வளவு பிரபலமோ, அதே அளவு பிரபலம் அவர் அமர்ந்திருந்த ஜீப். காலா படத்தின் போஸ்டரில் கூட ரஜினி ஒரு ஜீப்பின் மீது அமர்ந்திருப்பார். கலக்கலாக இருக்கும் அந்த போஸ்டரில், சூப்பர் ஸ்டாருக்கு அடுத்த படியாக மாஸ் அந்த ஜீப் தான். வாகன பிரியர்கள் அனைவரையும் ஈர்த்த அந்த ஜீப்பை ஒரு பிரபல நிறுவனம் இப்போது வாங்கி இருக்கிறது.

Remember I wanted the Thar used for the poster shot of #Kaala for our museum?Well @dhanushkraja obliged & it’s safe at #MahindraResearchValley in Chennai.I asked our folks to strike a Thalaivar pose & look what fun they had!(Bala,the guy in the lungi is now known as ‘KaalaBala’) pic.twitter.com/r3HzFv7DEJ

— anand mahindra (@anandmahindra) June 7, 2018

பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான மகேந்திரா ”காலா” படத்தில் இடம் பெற்றிருந்த அந்த ஜீப்பை, தங்களுடைய மியூசியத்தில் வைக்க விரும்பி, தனுஷிடம் கேட்டிருக்கின்றனர். அதற்கு சம்மதம் தெரிவித்த தனுஷும் காலா ஜீப்பை அந்த நிறுவனத்திடம் ஒப்படைத்திருக்கிறார். அதனை டிவிட்டரில் பகிர்ந்திருக்கும் மகேந்திரா நிறுவனத்தின் சேர்மன் ஆனந்த், ஒரு வீடியோவையும் அதனுடன் பகிர்ந்திருக்கிறார்.

அதில் ”எங்கள் ஊழியர்களிடம் இந்த காரில், ரஜினி அமர்ந்து எடுத்திருப்பதை போல போஸ் கொடுத்து, புகைப்படம் எடுத்துக்கொள்ள கூறி இருந்தேன். அவர்கள் செய்திருக்கும் சேட்டையை பாருங்கள். என கூறி இருக்கிறார்”.