The north Indians get Frowning for sang in Tamil in tamil music program

“நேற்று இன்று நாளை” என்னும் தமிழ் பெயரில் இசை நிகழ்ச்சியை நடத்திய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் முழுக்க முழுக்க தமிழில் பேசியும், தமிழ் பாடல்களை பாடியதாலும் வட இந்தியர்கள் கடுப்பாகி இசை நிகழ்ச்சியை விட்டு வெளியேறி விட்டனராம்.

உலகின் தலைச் சிறந்த இசை அமைப்பாளர்களில் ஒருவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் சமீபத்தில் இலண்டனில் லைவ் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்.

“நேற்று இன்று நாளை” என்னும் தலைப்பில் இந்த இசை நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழிலேயே பேசினார், தமிழ் பாடல்கள் தான் பாடப்பட்டன. இதனால் நிகழ்ச்சியை காண வந்த வட இந்தியர்கள் கடுப்பாகி பாதியிலேயே நிகழ்ச்சியைவிட்டு வெளியேறியுள்ளனர்.

தமிழில் தலைப்பு வைத்து நடத்தப்படும் நிகழ்ச்சியில் தமிழில் தான் பேசப்படும், தமிழ் பாடல்கள் தான் பாடப்படும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இது தெரியாமல் இசை நிகழ்ச்சிக்குச் சென்ற வட இந்தியர்கள் சமூக வலைதளங்களில் பொங்கி வருகின்றனர். ஆனால், அவர்களின் பொங்கல் எதுவும் சமூக வலைதளங்களில் எடுபடவில்லையாம்.

அதுவும் இல்லாமல் ஆஸ்கார் வாங்கும்போதே தமிழில் பேசிய தமிழன் ஏ.ஆர்.ரஹ்மான் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.

தமிழர்களுக்கான இசை நிகழ்ச்சியில் தமிழில் தான் பாடுவார். அது தெரியாமல் போய் உட்கார்ந்து வட இந்தியர்கள் கடுப்பானால் யார் பொறுப்பாக முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர் ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்கள்.