இயக்குனர் ஜனநாதன் மறைந்த இரண்டு நாட்களிலேயே... அவரது தங்கையும் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வந்தவர் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன். தற்போது விஜய்சேதுபதி, ஸ்ருதி ஹாசன் நடிப்பில் 'லாபம்' படத்தை இயக்கி முடித்திருந்தார். படத்தின் ஷூட்டிங் பணிகள் முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரோடக்‌ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. 'லாபம்' படத்தின் இறுதிக்கட்ட எடிட்டிங் பணிகளில் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் பணியாற்றி வந்தார். 

கடந்த மார்ச் 11ம் தேதி எடிட்டிங் பணியில் இருந்து ஜனநாதன் வீட்டிற்கு போய் சாப்பிட்டு விட்டு வருவதாக கூறியுள்ளார். வெகு நேரமாக அவர் எடிட்டிங் பணி நடக்கும் இடத்திற்கு வராததால் அவருடைய உதவியாளர் வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் வீட்டில் சுயநினைவின்றி கிடந்துள்ளார். 

மேலும் செய்திகள்: இணையத்தை கலக்கும் செல்வராகவன் - கீதாஞ்சலியின் 2 மாத குழந்தை! செம்ம கியூட் போட்டோஸ்!
 

உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துப் பரிசோதனை செய்தார்கள். அவரது மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. இந்த செய்தியைக் கேள்விப்பட்ட விஜய் சேதுபதி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் மருத்துவமனைக்கு சென்று அவர் உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர். 

மேலும் செய்திகள்: 'சாந்தி சௌந்தரராஜன்' படத்தில் நடிப்பது உண்மையா? ஐஸ்வர்யா ராஜேஷ் தரப்பு விளக்கம்!
 

மேலும் செய்திகள்: 'குண்டாய் கொழுக், மொழுக்குன்னு மாறிய 'சூரரை போற்று' அபர்ணா..! சேலையில் சிறகடித்த புகைப்படங்கள்..!
 

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஞாயிற்று கிழமை அன்று,   எஸ்.பி.ஜனநாதன் உயிரிழந்தார். பின்னர் மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில், பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, திங்கள் கிழமையன்று மயிலாப்பூர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இயக்குனர் ஜனநாதன் இறந்து இரண்டு நாட்களிகேயே... அண்ணன் பிரிவை தாங்க முடியாமல் சோகத்தில் ஆழ்ந்திருந்த அவரது தங்கை லட்சுமி என்பவரும் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.