'வலிமை' (Valimai Movie) படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு, இன்று படக்குழு இன்ப அதிர்ச்சி கொடுக்க தயாராகியுள்ளது. இதுகுறித்த தகவல் தற்போது வெளியாகி அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 

'வலிமை' படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு, இன்று படக்குழு இன்ப அதிர்ச்சி கொடுக்க தயாராகியுள்ளது. இதுகுறித்த தகவல் தற்போது வெளியாகி அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் வலிமை. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், இளம் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து, புரோமோஷன் பணிகளில் படக்குழு தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறது. படம் வெளியாவதற்கு வெளியீட்டுக்கு ஒரு மாதமே எஞ்சி உள்ளதால், படத்தின் அப்டேட்டுக்களும் அடுத்தடுத்து வெளியான வண்ணம் உள்ளன. ஏற்கனவே இப்படடத்தின் டீசர், பாடல்கள் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது நாம் அறிந்ததே.

சமீபத்தில் கூட வலிமை படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டனர். வலிமை படம் எத்தனை தடைகளைக் கடந்து உருவானது. இப்படத்தின் படப்பிடிப்பின் போது நிகழ்ந்த விபத்து மற்றும் கொரோனா ஊரடங்கால் இப்படம் சந்தித்த பிரச்சனைகள் உள்ளிட்டவற்றை உணர்வுப்பூர்வமாக தொகுத்து இந்த மேக்கிங் வீடியோவை உருவாக்கி இருந்தனர் படக்குழுவினர். குறிப்பாக வலிமை அப்டேட் கேட்டு ரசிகர்கள் செய்த அலப்பறை காட்சிகளும் வெளியாகி இருந்தது.

இதை தொடர்ந்து தற்போது அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இன்றைய தினம், வலிமை படத்தின் தீம் மியூசிக் குறித்த புரோமோ இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த தகவலை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் செம்ம வைரலாக்கி வருகிறார்கள்.

Scroll to load tweet…