Asianet News TamilAsianet News Tamil

The Legend Movie : வாடிவாசல் ரிலீஸ் தேதியை அறிவித்த லெஜண்ட் சரவணன் - ஷாக் ஆன சூர்யா ரசிகர்கள்

The Legend Movie : ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் லெஜண்ட் படத்தில் நாயகனாக நடித்துள்ளார் சரவணன். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

The Legend Movie second single Vaadivaasal release date announced
Author
Tamil Nadu, First Published May 18, 2022, 3:18 PM IST

தொழிலதிபரான லெஜண்ட் சரவணன், நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக அவர் தனது கடை விளம்பரங்களிலேயே நடித்து புது டிரெண்டை உருவாக்கினார். குறிப்பாக இவர் தமன்னா, ஹன்சிகா போன்ற முன்னணி நடிகைகளுடன் விளம்பரங்களில் ஆட்டம் போடுவதை பார்த்து கோலிவுட்டே வாயடைத்து போனது.

கடந்த சில ஆண்டுகளாக விளம்பரங்களில் மட்டும் நடித்து வந்த வெஜண்ட் சரவணன், தற்போது சினிமாவிலும் ஹீரோவாக களமிறங்கி உள்ளார். இவர் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இணைந்து இயக்குகின்றனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே அஜித்தின் உல்லாசம், ஷெரின் நடித்த விசில் போன்ற வெற்றிப் படங்களை இயக்கி உள்ளனர்.

இப்படத்துக்கு லெஜண்ட் என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்துலா நடித்துள்ளார். இப்படம் மூலம் அவர் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். மேலும் ரோபோ சங்கர், யோகிபாபு, விவேக், பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. 

The Legend Movie second single Vaadivaasal release date announced

இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். அவரது இசையில் கடந்த மாதம் வெளியான மொசலோ மொசலு என்கிற பாடல் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது 2-வது பாடல் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். அதன்படி வாடிவாசல் என்ற பாடல் வருகிற மே 20-ந் தேதி வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர். வழக்கமாக சூர்யாவின் வாடிவாசல் படம் தான் டுவிட்டரில் டிரெண்டாகும், ஆனால் தற்போது லெஜண்ட் படத்தின் வாடிவாசல் பாடல் டிரெண்ட் ஆனதை பார்த்து சூர்யா ரசிகர்கள் ஷாக் ஆகிப்போயினர்.

இதையும் படியுங்கள்... The Legend movie :கேன்ஸ் பட விழாவில் ‘லெஜண்ட்’ படக்குழு கொடுக்க உள்ள மாஸ் சர்ப்ரைஸ்- அதிரடி காட்டும் அண்ணாச்சி

Follow Us:
Download App:
  • android
  • ios