" kurup" திரைக்கு வந்த குறைந்த நாட்களிலேயே ஐக்கிய அரபு நாடுகளில் கிட்டத்தட்ட ரூ.10 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் ஓடி வரும் படம் அண்ணாத்த. முழுக்க முழுக்க எமோஷன் கலந்த படமாக உருவாகியுள்ள இந்த படம் 90 s ரஜினியை ஞாபகப்படுத்துவதாகவே உள்ளது என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். அண்ணன் -தங்கை உறவை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படம் முதல் நாளில் நல்ல வசூலை பெற்றுக்கொடுத்தது. ஆனால் ரஜினியின் ரசிகர்களுக்கு போதுமான தீனியை இந்த படம்கொடுக்கவில்லை என்றே தெரிகிறது. சமீபகாலமாக காலா, கபாலி, பேட்டை என தொடர்ந்து ஆக்சன் கதாப்பாத்திரங்களில் பிரதிபலித்த ரஜினி திடீரென மீண்டும் சென்டிமெண்டில் நுழைந்திருப்பது திருப்தி அளிக்கவில்லை என்றே பலரும் தெரிவித்து வருகின்றன. இந்த படம் பெண் ரசிகர்களை பெருதும் கவர்ந்திருந்தாலும், இளைஞர்கள் மத்தில் போதுமான வரவேற்பை பெறவில்லை என ரசிகர்களின் கமெண்ட் சொல்கிறது.

அதேபோல ஶ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள படம் ‘Kurup’. தேடப்படும் குற்றவாளியான சுகுமார் குருப்பை மையமாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஷோபிதா துலிபலா, இந்திரஜித் சுகுமாரன், ஷைன் டாம் சாக்கோ, ஷன்னி வேய்ன், டொவினோ தாமஸ், ஷிவஜித், பத்மனாபன், சுதீஷ், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். துல்கர் சல்மானின் வேஃபேரர் பிலிம்ஸ் மற்றும் எம் ஸ்டார் எண்டெர்டெய்ன்மெண்ட் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன.
பல தாமதங்களுக்குப் பிறகு, படம் கடந்த நவம்பர் 12 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கிரைம் ஸ்டோரியாக இதன் ப்ரோமஷனுக்காக பிரமாண்ட ஏற்பாடுகளை படக்குழு செய்திருந்தது. அதன்படி இந்த படத்தின் ட்ரெயிலர் கடந்த நவம்பர் 10 ஆம் தேதி துபாயில் உள்ள Burj Khalifa -வில் காட்சிப்படுத்தப்பட்டது. இதன் மூலம் உலகின் மிக உயரமான வானளாவிய கட்டிடத்தில் இடம்பெறும் முதல் மலையாளப் படம் என்ற பெருமையை இப்படம் தட்டி சென்றது.

இந்த இருபடங்களும் ஐக்கிய அரபு நாடுகள் திரையிடப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தை தவிர மற்ற இடங்களில் குறைவான வசூலை பெற்றுள்ள அண்ணாத்த கடந்த 4-ம்ம் தேதியிலிருந்து இதுவரை இதுவரை ரூ 6 கோடிக்கு மேலாக வசூல் செய்தது.
இந்த வசூலை திரைக்கும் வந்த மூன்றே நாட்களில் துல்கர் சல்மானின் kurup பின்னுக்கு தள்ளியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய அரபு நாடுகளில் kurup திரைக்கு வந்த குறைந்த நாட்களிலேயே கிட்டத்தட்ட ரூ.10 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
