The idea of Satyaraj intention to stop the human stroke of man
“வாரம் ஒவ்வொரு சாதிக்கரனும் மலம் அள்ளனும்” என்று சொன்னால் உடனே டிசைன் டிசைனா மெஷின் கண்டுபுடிச்சு மலத்த அள்ள ஆரம்பிச்சுருவானுங்க. அதன்மூலம் மனித மலத்தை மனிதன் அள்ளுவதை தடுக்கலாம்” என்று சத்யராஜ் தனது நக்கல் மற்றும் பகுத்தறிவு பாணியில் யோசனை சொல்லியுள்ளார்.
நாட்டில, சாதி வேணும்னு சொல்றவனை விட வேண்டாம் என்று சொல்றவன் தான் அதிகமா இருக்கான் என்று சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.
சாதியை ஒழிப்போம், கையால் மலம் அள்ளும் இழிவுக்கு உடனே முடிவு கட்டுவோம் என்ற முழக்கத்துடன் இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் ஜெய்பீம் மன்றம் இணைந்து 'மஞ்சள்' நாடகம் நிகழ்த்தப்பட்டது.
சென்னை காமராஜர் அரங்கத்தில் நடந்த இந்த நாடக நிகழ்ச்சியில் தொல் திருமாவளவன், கனிமொழி, திருநாவுக்கரசர், கொளத்தூர் மணி, சமுத்திரக்கனி, சத்யராஜ், கவிஞர் உமாதேவி, சந்தோஷ் நாராயணன், நிரோ பிரபாகர், நலன் குமாரசாமி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
கிட்டத்தட்ட 60 நாடக கலைஞர்கள் இணைந்து சாதியை ஒழிப்போம், கையால் மலம் அள்ளும் இழிவுக்கு உடனே முடிவு கட்டுவோம் என்ற முழக்கதுடன் இந்த மஞ்சள் நாடகத்தை நடத்தி காட்டினார்.
இதன்பிறகு சத்யராஜ் பேசியது:
“மனுசனே மனுச மலத்தை அள்ளும் வேலைய ஸ்டாப் பண்றதுக்கு ஒரேயொரு சிம்பிள் வழி இருக்கு. வாரம் ஒவ்வொரு சாதிக்கரனும் மலம் அள்ளனும் என்று சொல்லிப் பாருங்க. உடனே டிசைன் டிசைனா மெஷின் கண்டுபுடிச்சு மலத்த அள்ள ஆரம்பிச்சுருவானுங்க” என்று தனக்கே உரித்தான நக்கல் பாணியில் பேசினார்.
பின்னர், சமுத்திரக்கனி பேசியது:
“எல்லா சாதிலேயும், சாதி வேணும்னு சொல்றவனை விட சாதி வேணாம்னு சொல்றவன் தான் அதிகாம இருக்கான். அவன்லாம் அமைதியா இருக்கிறதால தான் சில சில்லரைக சத்தம் இந்த நாட்டில அதிகமா கேக்குது.
இனி சாதி வேணாம்னு சொல்றவங்க எல்லாரும் பொதுவில் வந்து பேசணும். அப்பதான் சாதிய ஒழிக்க முடியும்” என்றுத் தெரிவித்துள்ளார்.
