“மொத்தமாக மறுக்கும் தல டீம்”

தல அஜித் சிறுத்தை சிவாவுடன் வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து தற்போது விசுவாசம் படத்திற்காக நான்காவது முறையாக இணைந்துள்ளனர். சமீபத்தில் விஸ்வாசம் திகில் கலந்த பேய் படமாக உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன, தற்போது இதற்கு படக்குழுவினர் விளக்கமளித்துள்ளனர். விஸ்வாசம் வீரம் படத்தை போல குடும்ப பின்னணியில் உருவாகும் படம், பேய் படம் அல்ல என கூறியுள்ளனர். மேலும் ஒரே கட்டமாக முழு ஷூட்டிங்கையும் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளார்களாம்.

“கூட்டத்தில் ஒருவனாக மகளின் விளையாட்டை ரசித்த தளபதி”

தளபதி விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இவருடைய எளிமை ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். இவருக்கு சஞ்சய் என்ற மகனும் திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளது நாம் அனைவரும் அறிந்தது தான். சமீபத்தில் கூட இவர்களது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின.

இந்நிலையில் தற்போது பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டியில் விஜயின் மகள் கலந்து கொண்டுள்ளார். இதனை தளபதி விஜய் கூட்டத்தில் ஒருவராக அமர்ந்து தன்னுடைய மகள் விளையாடுவதை பார்த்து ரசித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகத் தொடங்கியுள்ளது. தளபதி ரசிகர்களும் இதனை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

“பத்து வயது சிறியவரை கல்யாணம் பண்ணும் ஹாட் நாயகி”

இந்திய திரையுலகில் பல நடிகைகள் நடிக்க வருகின்றனர், சில நடிகைகளுக்கு மட்டுமே தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கின்றன. மார்க்கெட் இருக்கும் வரை அவர்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும். அப்படி தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல ஒளி படங்களில் நடித்து வந்தவர் ஸ்ரேயா, பின்னர் வாய்ப்புகள் குறைய தொடங்கியதால் திரையுலகை விட்டு விலகி இருந்தார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் AAA படத்தின் மூலம் ரி-என்ட்ரி கொடுத்திருந்தார். அந்த படமும் ஸ்ரேயாவுக்கு பெரிதாக கை கொடுக்காததால் தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொள்ள உள்ளார். ஆனால் ஷ்ரேயாவின் காதலர் அவரை விட 10 வயது சிறியவர் என கூறப்படுகிறது, திரையுலகில் 10 வயது சிறியவரை திருமணம் செய்து கொள்ளும் முதல் நடிகை ஷ்ரேயா தான் என குறிப்பிடத்தக்கது.

“மீண்டும் பரீத் கூட டூயட் பாடும் தீரன்”

மாபெரும் வெற்றி பெற்ற “தீரன் அதிகாரம் ஒன்று” படத்தை தொடர்ந்து கார்த்தி , ரகுல் பிரீத்சிங் வெற்றி ஜோடி மீண்டும் இணைகிறார்கள் .
மேலும் பிரகாஷ்ராஜ் , ரம்யா கிருஷ்ணன் , RJ விக்னேஷ் , அம்ருதா , ரேணுகா மற்றும் பலர் நடிக்கிறார்கள் . இவர்களுடன் முக்கிய வேடத்தில் நவரச நாயகன் கார்த்திக் நடிக்கிறார்.

பெயரிடப்படாத “ கார்த்தி 17’’ படத்தை ரிலையன்ஸ் எண்டெர்டைன்மென்ட் வழங்க – பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ். லஷ்மண்குமார் தயாரிக்கிறார். இவர், சூர்யா நடித்த சூப்பர் ஹிட்டான :சிங்கம்2” படத்தை தயாரித்தவர்
“#கார்த்தி 17’’ படத்தின் படபிடிப்பு இம்மாதம் 8ம் தேதி சென்னையில் ஆரம்பமாகிறது. இதை தொடர்ந்து யுரோப் நாட்டில் 15 நாட்களும் , ஹைதராபாத் , மும்பை , இமயமலை பகுதிகளிலும் உருவாகிறது.