The film will reflect the dissatisfaction of the people of Tamil Nadu ...
நயன்தாரா நடிப்பில் வரும் 10-ஆம் தேதி ரிலீசாக இருக்கும் படம் `அறம்'.
கோபி நைனார் இயக்கும் இந்தப் படம் சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையமாக கொண்டு உருவாகி உள்ளது.
சமீபத்தில் வெளியாகிய இப்படத்தின் டிரைலரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் விக்னேஷ், ரமேஷ், சுனு லெட்சமி, வினோதினி வைத்தியநாதன், ராமச்சந்திரன் துரைராஜ், ஆனந்தகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தமிழக மக்களின் பொதுவான அதிருப்தி மனநிலையை பிரதிபலிக்கும் படமாக இப்படம் உருவாகியுள்ளது என்று படக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், இப்படத்தில் நயன்தாரா மாவட்ட ஆட்சியாளராக நடித்துள்ளார். சமுதாய பிரச்சனைகளை பற்றி பேச்சில் மட்டுமில்லாமல், சில செயல் திட்டங்களையும் தெரிவித்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
