The film is getting rid of the senses Fans are happy ...

அஜித் நடித்த விவேகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவா இயக்கத்தில் அஜீத், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் மற்றும் பலர் நடித்துள்ள படம் விவேகம்.

தற்போது இந்தப் படத்தின் டப்பிங் பணிகளை மூன்று நாள்களில் முடித்துக் கொடுத்துள்ளார் அஜித் என்று படக்குழுவினர் பாராட்டியுள்ளனர்.

இந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் சத்யஜோதி பிலிம்ஸ் அறிவித்துள்ளது.

விவேகம் படத்தை தயாரிக்கும் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன், “வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி படத்தை பிரமாண்டமாக வெளியிட முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஏழு பாடல்களில் சர்வைவா மற்றும் தலை விடுதலை பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது கொசுறு தகவல்.