பாலா இயக்கத்தில் பூர்ணசந்திரராவ் தயாரிப்பில் ‘நந்தா’ படத்தில் ஹீரோவாக நடிக்க இருந்தார் அஜித். கதையைக் கேட்க அஜித் சென்றிருக்கிறார். ஒரு பத்து வரிகளில் பாலா கதையை சொல்லி இருக்கிறார். இதனால் அதிருப்தியான அஜித்திடம் மற்றொரு நாள் விரிவாக கதை சொல்கிறேன் என அனுப்பி வைத்திருக்கிறார் பாலா. 

மீண்டும் அஜித்தை அழைத்திருக்கிறார் பாலா. நீண்ட கதை கேட்கபோகும் ஆவலில், காத்திருந்த அஜித்திடம் முதலில் சொன்ன பத்து வரியில் இரண்டே வரியை மட்டும் சொல்லி அசிங்கப்படுத்தி அனுப்பி இருக்கிறார் பாலா. அதன் பிறகே நந்தா படத்தில் சூர்யா நடித்தார். இவ்வளவு நடந்த பிறகும் மீண்டும் பாலா படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் அஜித்.

 

’நான் கடவுள்’ படத்தில் அஜித் நடிக்க இருந்தார். அப்போதும் பாலாவின் செயல்பாடுகளால் இருவருக்கும் மன ஸ்தாபம் ஏற்பட்டது. அஜித்துக்கும் பாலா தரப்புக்கும் சமரசப் பேச்சுவார்த்தை சென்னை நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. சமரசப் பேச்சுவார்த்தையின்போது, அஜித்திடமிருந்து அட்வான்ஸை திரும்பப் பெற, பாலாவும் அவரது ஆதரவாளர்களும் வன்முறையைக் கையாண்டதாகக் கூறப்பட்டது. அஜித்தை மிரட்டியதாகவும், கைகலப்பு ஏற்பட்டதாகவும் பேச்சு நிலவியது.