'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர், மதுரை பொண்ணு நிவேதா பெத்துராஜ். முதல் படத்திலேயே "அடியே... அழகே..." என்கிற ஒரே பாடலில் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.

இந்த படத்தில், ரித்விகா, மியா ஜார்ஜ் என மேலும் இரண்டு நடிகைகள் நடித்த போதிலும், தற்போது வரை பல படங்களில் வரிசை கட்டி நடிக்கும் வாய்ப்பு இவருக்கு மட்டுமே கிடைத்துள்ளது.

நடிகர் பிரபுதேவா நடிப்பில் பொங்கல் விருந்தாக வரவுள்ள 'பொன் மாணிக்கவேல்' படத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ் ஹீரோயினாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவர் முதல் முறையாக அவரிடம் சிறு வயதில் இருந்த கெட்ட பழக்கத்தை வெளிப்படையாக கூறி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார். அதாவது, சிறிய வயதில் நிவேதா... மற்ற குழந்தைகளிடம் இருந்து சாக்பிஸ் எடுத்து கொள்வது, சிலேட் எடுத்து கொள்வது மற்றும் கடைகளுக்கு சென்றால் சாக்கலேட் போன்றவற்றை திருடுவது போன்ற பழக்கம் இருந்ததாம்.

பின் இது தவறு என தெரியவர, அந்த பழக்கத்தை விட்டு விட்டதாக கூறியுள்ளார். ரசிகர்கள் மனதை கொள்ளை அடிக்கும் அழகிக்கு, இப்படி ஒரு பழக்கம் இருந்ததா? என ரசிகர்களுக்கே கொஞ்சம் அதிர்ச்சிதான் பாஸ்.