மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ரஜிஷா விஜயன், இவர் படப்பிடிப்பு தலத்தில் மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் தருண் இயக்கத்தில், உருவாகிவரும் 'கட்டப்பனா'  என்ற மலையாள படத்தில் நடித்து வருபவர் ரஜிஷா விஜயன். சைக்கிள் வீராங்கனை ஒருவரது வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில், இவர் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவை சுற்றி உள்ள பகுதிகளில் நடந்து வருகிறது.  

இந்த படத்தில் சைக்கிள் வீராங்கனையாக இவர் நடிப்பதால், அதிக நேரம் சைக்கிள் பயிற்சி மேற்கொண்டு நடித்து வருகிறார். இந்நிலையில் பயிற்சி மேற்கொண்டபோது...  திடீர் என மயங்கி கீழே விழுந்தார்.

முகத்தில் தண்ணீர் தெளித்தும், அவர் கண் விழிக்காததால், படக்குழு உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து அருகில் உள்ள மருத்துவமனையில் இவரை சேர்த்தனர். அவரை சோதித்த மருத்துவர்கள், அதிக உடல் பயிற்சி செய்தும், சைக்கிள் பயிற்சி செய்தும் தண்ணீர் குடிக்காத காரணத்தால், இவருடைய உடலில் தண்ணீரின் அளவு மிக குறைவாக உள்ளது என கூறியுள்ளனர்.

மேலும் ஒரு வாரகாலம், அவர் படப்பிடிப்பு மற்றும் எந்த பயிற்சியும் மேற்கொள்ள கூடாது என கூறியுள்ளனர். இதனால் உடல் நலம் சீரானதும் மீண்டும் படப்பிடிப்பில் இவர் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.