திருமணம் என்பது சாதாரண விஷயம் அல்ல, அதனால் தான் முன்னோர்களே, வீட்டை கட்டி பார், திருமணத்தை செய்து பார், என அதன் அருமை, பெருமையை. பழமொழியாக கூறியுள்ளனர்.

குடும்பத்தினர் ஒத்துழைப்போடு திருமணத்தை செய்வதே, கடினம் என்றால்... கணவரை இழந்து, தனி மனிதியாக நிற்கும் ஒரு பெண் தன்னுடைய மகளின் திருமணத்தை சீரும், சிறப்புமாக செய்வது என்பது சாதார காரியம் அல்ல.

ஆனால், சில அரக்க குணம் கொண்டவர்கள்... வாயில் வரும் வார்த்தைகளையும், எதார்த்தமாக எடுக்கும் புகைப்படங்களையும் தவறாக சித்தரித்து, சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, நடிகைகளுக்கு அவப்பெயரை உண்டாக்கி விடுகிறார்கள். அந்த வகையில், சமீபத்தில் தன்னுடைய மகள் சௌபாக்கியாவிற்கும்,  அர்ஜுன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார் நடிகை தாரா கல்யாண்.

அம்மா நடிகை என்றாலும் மகள் அவ்வப்போது டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டு, அதன் மூலம் மிகவும் பிரபலமானவர். சௌபாக்கியாவின் திருமணம் கடந்த மாதம் 20 ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில், திருமணத்தின் போது எடுத்த ஒரு புகைப்படத்தை தவறாக சித்ததரித்து, மர்மநபர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் தாராவிற்கும், அவருடைய மருமகன் அர்ஜூனுக்கும், தவறான உறவு உள்ளது என வதந்தியை பரப்ப, அது தாரா மற்றும் அவருடைய குடும்பத்தினரை உணர்வு பூர்வமாக அதிகம் பாதித்தது.

இந்நிலையில் தாரா கல்யாண், கதறி அழுதபடி வெளியிட்டுள்ள வீடியோ மூலம் அவர் எந்த அளவிற்கு புண் பட்டுள்ளார் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. இந்த திருமணத்தை ஒரு தாயாக அதுவும் யாருடைய துணையும் இன்றி கடவுள் துணையால் செய்து வைத்தேன், தன்னை பற்றி கடவுளுக்கு தெரியும் என அவர் வீடியோவில் பேசி உள்ள வார்த்தைகள் நெஞ்சை உருக்கும்படி அமைந்துள்ளது.

மேலும்,  "பெண்களுக்கு மரியாதை கொடுக்க கொஞ்சமாவது கற்றுக்கொள்ளுங்கள். பெண்களை பற்றி இழிவாக பேசும் உங்கள் வீட்டில் பெண்கள் இல்லையா..? இல்லை நீங்கள் தான் ஒரு பெண் வயிற்றில் பிறக்கவில்லையா?. என சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோ இதோ...