Thankar bachan against vijay mersal
தமிழகத்தைத் தாண்டி கேரளா, ஆந்திரா மற்றும் வெளிநாடுகளிலும் விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் வசூல் சாதனை படைத்து வந்தாலும். ஒரு சில காட்சிகளை நீக்கியே தீர வேண்டும் என்கிற சர்ச்சைக்கு இன்னும் சரியான முடிவு கிடைக்கவில்லை.
மெர்சல் படத்தில் இருந்து எந்த ஒரு காட்சியையும் நீக்கக் கூடாது என தொடர்ந்து பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் தங்களுடைய கருத்தை ட்விட்டர் மூலமும், பேட்டிகள் மூலம் தெரிவித்து வருகின்றனர். மேலும் பல அரசியல் கட்சிகளும் நேரடியாகவும், மறைமுகமாகவும் மெர்சல் படத்தின் காட்சிகளை நீக்கக் கூடாது என கூறி வருகின்றனர்.
இந்நிலையில் முதல் முறையாக பிரபல இயக்குனர் தங்கர் பச்சான், விஜயை கேவலப்படுத்தும் விதத்தில் ஒரு ட்விட் பதிவிட்டுள்ளார் அதில் "நம் நாட்டில் மட்டுமே மசாலா சினிமா புகழை வைத்து அரசியலுக்குள் நுழைகின்றனர். உலகத்தில் எந்த மக்களும் இப்படிப்பட்ட கேவலத்தை அனுமதிப்பதில்லை" என்று கூறியுள்ளார்.
இவரின் ட்விட்டருக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் விஜய் ரசிகர்கள் பலர் வெளிநாடுகளிலும் நடிகர்களாக இருந்து அரசியலில் பலர் களமிறங்கியுள்ளனர் என தங்கர்பச்சானிடம் வாக்குவாதம் செய்து வருகின்றனர்.
