thanaserntha kootam movie

நானும் ரௌடிதான் படத்தை இயக்கி ஹிட் கொடுத்த விக்னேஷ் சிவன், தற்போது சூர்யா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் "தானா சேர்ந்த கூட்டம்" என்கிற படத்தை இயக்கி வருகிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

விரைவில் இந்த படத்தின் பஸ்ட் லுக்கை வெளியிட முடிவு செய்துள்ளனர் படக்குழுவினர்.

இந்நிலையில் அக்ஷய்குமார் நடிப்பில் ஹிந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான "ஸ்பெஷல் 26" படத்தின் கதையை சுட்டு தான் விக்னேஷ் சிவன் இந்த படத்தை இயக்கி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் நடித்த ஒரு சில நடிகர்களும் இரண்டு கதையும் ஒரே போல் இருப்பதாக கிசுகிசுத்து வருகின்றனர்.

இந்த தகவலை அறிந்த அந்த படத்தின் உரிமையை பெற்று வைத்திருக்கும் தியாகராஜன் ஷாக் ஆகி, விசாரித்ததில் இரண்டு கதைகளும் ஒரே போல் இருப்பதாகவும், தான் உரிமம் வாங்கி வைத்திருக்கும் கதையை விக்னேஷ்சிவன் இயக்கி வருவதாக கூறி தடை கூற முடிவெடுத்துள்ளாராம்.

இதன் காரணமாக இந்த படத்திற்கு செக் வைத்துள்ளார் தியாகராஜன், மேலும் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தப்பட்டாலும் வெளியாவதில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது இதனால் சூர்யா மற்றும் படக்குழுவினர் சிறு கலக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது .