நடிகை தமன்னா தற்போது இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என பல்வேறு மொழிபடங்களிலும் முன்னனி கதாநாயகருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா அடுத்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ள புது படத்தில் நாயகியாக நடிக்க 
 தமன்னா கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகின்றது. 

27 வயதான தமன்னா 57 வயதுடைய பாலகிருஷ்ணாவிற்கு கதாநாயகியாக நடிக்கிறார், முதன் முறையாக தன்னை விட 30 வயது அதிகம் உள்ள நடிகருடன் தமன்னா நடிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.