பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு முதல் முறையாக போட்டோ சூட்டில் ஈடுபட்டுள்ள தாமரை மற்றும் ஐக்கி பெர்ரி இருவரும் ஓ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது. 

உலகளவில் பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் கடந்த 2017-ம் ஆண்டு தமிழில் அறிமுகமானது. விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சமில்லாத இந்நிகழ்ச்சி அந்த ஆண்டே ரசிகர்களின் பேவரைட் நிகழ்ச்சியாக மாறியது. இந்நிகழ்ச்சியின் கூடுதல் சிறப்பு என்றால் அது கமல்ஹாசன் தான். அவர் தொகுத்து வழங்கும் விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால், இன்றளவும் 5-வது சீசன் வரை அவரே தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் மூலம் மிகவும் பாப்புலர் ஆனவர் என்றால் அது தாமரைச் செல்வி தான். நாடகக் கலைஞரான இவர், இந்நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். இறுதிப்போட்டி வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட தாமரைச் செல்வி, குறைந்த வாக்குகள் பெற்றதன் காரணமாக எலிமினேட் செய்யப்பட்டார்.

இந்நிகச்சியில் இருந்து வெளியேறியதும் அவருக்கு மற்றொரு பிரம்மாண்ட வாய்ப்பை விஜய் டிவி வழங்கி உள்ளது. அதன்படி குக் வித் கோமாளி சீசன் 3-ல் தாமரை போட்டியாளராக கலந்துகொள்ள உள்ளார். இது ஒருபுறம் இருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தாமரைக்கு வழங்கப்பட்ட சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி அவருக்கு ஒரு வாரத்துக்கு 70 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் 14 வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்ததால், அவருக்கு மொத்தம் 9 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் சம்பளமாக கிடைத்துள்ளதாம். இதை அறிந்த ரசிகர்கள் அவர் money டாஸ்கில் 12 லட்சத்துடன் வெளியேறி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு முதல் முறையாக போட்டோ சூட்டில் ஈடுபட்டுள்ள தாமரை மற்றும் ஐக்கி பெர்ரி இருவரும் ஓ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது. 

View post on Instagram