இதனிடையே, உலக நாயகன் கமல்ஹாசனின் 60 ஆண்டு திரையுலக பயணத்தை கொண்டாடும் வகையில், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற உங்கள் நான் நிகழ்ச்சியில் தமன்னா பங்கேற்றார். 

அப்போது, உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படம் ரசிகர்களின் லைக்குகளை குவித்தது.இந்த நிலையில், திருச்சியில் நகை கடை திறப்பு விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை தமன்னா சந்தித்தார். 

அப்போது, ரஜினி - கமல் குறித்து அவர் கூறுகையில், ரஜினி, கமல் ரசிகையாக அவர்களை நேசிக்கிறேன். அதனால்தான் அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டேன். எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. ஆனால், ரஜினியும், கமலும் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நன்மை செய்வதை வரவேற்கிறேன். அவர்களுடன் இணைந்து நடிக்கவும் ஆசைப்படுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே உலக நாயகன் அரசியலுக்கு வந்துவிட்ட நிலையில், 2021ம் ஆண்டு அரசியல் களத்தில் குதிக்க சூப்பர் ஸ்டாரும் தயாராகி வருகிறார். தங்களது திரைப் பயணத்தில் இருவரும் கடைசிக் கட்டத்தில் இருக்கின்றனர். 

இந்த வேளையில், ரஜினி, கமலுடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் தமன்னாவின் ஆசை நிறைவேறுமா என்பது சந்தேகமே. தமன்னாவின் இந்த ஆசையை கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும், ரஜினி, கமல் ஆகியோரின் திரைவாழ்க்கை அஸ்தமனமாகும் நேரத்துல, உனக்கு இப்படியொரு ஆசையாம்மா என கிண்டல் செய்து வருகின்றனர்.