இயக்குனர் ரோஹித் வெங்கடாச்சலம் இயக்கத்தில் தமன்னா மற்றும் யோகிபாபு நடித்துவரும் திரைப்படம் ‘பெட்ரோமாக்ஸ்’ . கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டான 'அனந்த பிரேமா' என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக எடுக்கப்பட்டு வரும், இப்படத்தை செப்டம்பர் 17ம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

தமன்னா ஏற்கனவே தேவி முதல் பாகம், மற்றும் இரண்டாம் பாகத்தில் ஹாரர் காமெடி ஜானரில் நடித்துள்ள நிலையில், மீண்டும் இவர் ஹாரர் படத்தில், நடிகர் யோகிபாபு உடன் நடிக்க ஒப்புக் கொண்டுள்ள திரைப்படம் பெட்ரோமாக்ஸ்'.

இந்த படத்தில் ராம்தாஸ், மன்சூர் அலிகான், உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார்.  உள்ளார் இப்படத்தை  ஈகிள்ஸ் ஐ புரொடக்ஷன்ஸ்  நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த நிறுவனம் தொடர்ந்து ரீமேக் படங்களை மட்டுமே தயாரிக்க திட்டமிட்டிருந்த, நிலையில் முதல் முறையாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இப்படத்தை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.