தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருப்பவர் தமன்னா. தற்போது கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்நிலையில், இன்று மிகவும் பிரமாண்டமாக துவங்க உள்ள ஐ.பி.எல் போட்டியில் நடனமாட இவரை குழுவினர் அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்க்கு சம்மதம் தெரிவித்து வெறும் 10 நிமிடம் நடனம் ஆட 50 லட்சம் சம்பளமாக கேட்டுள்ளார் தமன்னா. 

இவர் கேட்ட தொகையை கொடுத்து இவரை புக் செய்துள்ளனர் குழுவினர்.

தற்போது நடைபெற்று வரும் காவிரி மேல்ன்மைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என ஐ.பி.எல் போட்டியை புறக்கணிக்க வேண்டும் என பிரபலங்கள் பலர் போர் கொடி தூக்கியுள்ள நிலையில் இப்படியும் நடிகைகள் லட்ச கணக்கில் காசு பார்த்து வருகின்றனர்.

இந்த ஐ.பி.எல் போட்டியில் தமன்னாவை தவிர பல பிரபலங்கள் கலந்துக்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.