சினிமாவில் மற்றும் இன்றி, வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வெளியுலகில் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து,  நடிகைகள் பலர்  'மீ டூ' ஹாஷ்டாக் மூலம் பகிர்ந்து வருகின்றனர்.

ஹாலிவுட் திரையுலகில் ஆரம்பமான இது, பாலிவுட், கோலிவுட் என அனைத்து திரையுலகிலும் பரவி, இதில் பல நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பற்றிய தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கியது.

இந்த நிலையில், நடிகை தமன்னாவிடம் நடிகைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாவது குறித்து,  பட உலகில் உங்களுக்கு இதுபோல் பாலியல் தொல்லைகள் ஏற்பட்டுள்ளதா என்று கருத்து கேட்டபோது அதற்கு பதில் அளித்துள்ளார் தமன்னா...

சில நடிகைகள் பட உலகில் பாலியல் தொல்லை இருப்பதாக குற்றச்சாட்டு சொல்லிவருகிறார்கள்.  ஒரு படத்தை உருவாக்க எத்தனையோ கோடி செலவு செய்யப்படுகிறது.  அந்த படத்தில் நிறைய நடிகர் நடிகைகள் தொழில் நுட்ப கலைஞர்களும் சம்பந்தப்பட்டு இருப்பார்கள்.

முழு முயற்சியுடன் ஒரு படத்தை படக்குழு எடுக்கும் நேரத்தில்,  கேவலம் இப்படி கதாநாயகியை ஆசைக்கு இணங்க அழைப்பார்களா? என்று  எனக்கு தெரியவில்லை. எனக்கு இதுமாதிரி அனுபவங்கள் ஏற்பட்டது இல்லை.

அவ்வளவு பணத்தை போட்டு படமெடுக்கும் போது இந்த மாதிரி வேலைகள் செய்பவர்கள் என்று கற்பனை கூட என்னால் யோசிக்க முடியவில்லை நான் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை காதல் திருமணமோ பெற்றோர் நிச்சயம் செய்யும் திருமணம் என்று பலரும் கேட்கிறார்கள் வாழ்க்கையில் நாம் நினைத்த மாதிரி எதுவும் நடப்பதில்லை பார்க்கலாம் என்று தமன்னா கூறினார்